இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசனை வைத்து 'இந்தியன் 2' படத்தை இயக்கிவந்தார். பிறகு அவர் அரசியலில் பிஸியாக இருப்பதால், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பட வேலை மீண்டும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கும் வேலைகளில் ஷங்கர் இறங்கியுள்ளார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து ஷங்கர், ரன்வீர் சிங் நடிக்கும் இந்தி படமொன்றையும் இயக்கவுள்ளார். அவர் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான 'அந்நியன்' படத்தை தான், இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல்கட்ட வேலைகள் முடிந்த பிறகு, இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அர்ஜுன் நடிப்பில் வெளியான 'முதல்வன்' படத்தை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்தார். அதன்பின் ஷங்கர் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் படமாக, இது அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.