தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாகுபலியை விட 10 மடங்கு உழைப்பு' - 'காடன்' ராணா - காடன் ராணா

'காடன் 'படம் நிறைவடையும்போது 10 பாகுபலி படத்தில் நடித்ததைப் போன்று உணர்ந்தேன் என்று ராஜமௌலியிடம் கூறியதாக ராணா தெரிவித்துள்ளார்.

Rana daggubati
Rana daggubati

By

Published : Feb 13, 2020, 9:46 AM IST

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் பிரபு சாலமன், ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது.

காடன் படக்குழுவினருடன் ராணா டக்குபதி

இந்த விழாவில் ராணா பேசுகையில், ”பாகுபலிக்குப் பிறகு நல்ல படத்தில் நடிக்க வேண்டுமென்று காத்திருந்தேன். பாகுபலியில் ராஜமௌலி என்னை பேரரசனாகக் காட்டினார். காடன் படத்தில் பிரபு சாலமன் என்னைக் காட்டில் விட்டுவிட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் நான் சென்னை வந்துள்ளேன். ஆரம்பக் காலங்களில் சென்னை வந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன்.

அந்த ஆசை காடன் மூலம் நிறைவேறியுள்ளது. 'காடன்' காடு, யானைகளைக் காப்பற்ற போராடும் மக்களைப் பற்றிய கதையை கமர்சியலாக எடுத்த படம். பாகுபலி படத்தில் கடினமாக உழைத்திருப்பதாக ராஜமௌலியிடம் கூறினேன். ஆனால் இப்போது காடன் படம் நிறைவடையும்போது 10 பாகுபலி படத்தில் நடித்ததைப் போன்று உணர்ந்தேன் என்று ராஜமௌலியிடம் கூறினேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details