மும்பை: 'காடன்' படத்துக்காக 30 கிலோ எடை குறைத்திருப்பதாக நடிகர் ராணா டகுபதி கூறினார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராணா கூறியதாவது, ' 'பாகுபலி' படத்துக்குப் பிறகு இயக்குநர் பிரபு சாலமன் என்னை சந்தித்தார். அப்போது நான் 'காளை' போன்ற தோற்றத்தில் இருந்தேன். இதையடுத்து 'காடன்' படத்தில் நான் நடித்துள்ள பன்தேவ் கதாபாத்திரத்துக்காக, என்னை புதுமை செய்யலாம் என்பது பற்றிப் பேசினார்.
மிக நீண்ட காலமாக காட்டிலேயே வாழ்ந்து வரும் மனிதனின் தோற்றம், உணவுப் பழக்கம் முதல் அவன் வாழ்க்கை முறை எப்படியிருக்கும் என்பதைக் கொண்டு வர முடிவு செய்து, அதற்கேற்றார்போல் உடற்தோற்றத்தை மாற்றினேன். 30 கிலோ வரை உடல் எடையைக் குறைத்தேன்.
இந்தக் கதாபாத்திரத்தை நியாயப்படுத்துவற்காக பல்வேறு சவால்களைச் சந்தித்தேன். படத்தில் நடித்தது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கவில்லை. மூன்று மொழிகளில் படத்தை உருவாக்குவது, யானை, இயற்கை எனப் பல்வேறு விஷயங்களைச் சந்திக்க நேர்ந்தது.