மும்பை: வாரிசு நடிகர் என ரசிகர் ஒருவர் தன்னை கலாய்த்ததற்கு தல அஜித் ஸ்டைலில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் நடித்து வரும் ராணா டகுபதி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவரது தந்தை சுரேஷ் பாபு தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் நிலையில், சுரேஷ் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார்.
ராணாவின் தாத்தா, தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ராமாநாயுடு. அதேபோல் அவரது மாமாவாக மூத்த ஹீரோ டகுபதி வெங்கடேஷும், உறவினராக வளர்ந்து வரும் இளம் ஹீரோ நாக சைதன்யாவும் இருக்கிறார்கள்.
இதையடுத்து ராணா பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தபோதிலும், தெலுங்கு ரசிகர்கள் சிலர் அவரை வாரிசு நடிகர் எனவும், சினிமா பரம்பரையிலிருந்து வந்தவர் எனவும் முத்திரை குத்தி வருகின்றனர்.
தனிப்பட்ட திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் சினிமா பின்னணியை வைத்து, அதை முன்னிருத்துவது ராணா போன்ற சினிமாவை பின்புலமாகக் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் அனைத்து நடிகர், நடிகைகளும் மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்துவதாக பலமுறை அவர்களே தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், நாளிதழ் ஒன்றுக்கு நடிகர் ராணா சமீபத்தில் அளித்த பேட்டியை ரசிகர் ஒருவர் கட் செய்து சமூக வலைத்தளபக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பேட்டியின் தலைப்பில், 'நான் 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன். ஆனால் அது என் கனவுகளை பின்தொடர்ந்து செல்வதில் ஊக்கப்படுத்தாமல் இருந்ததில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.