தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிங்கிள் மோடில் இருந்து கமிட் மோடுக்கு மாறிய 'பல்வாள்தேவன்'! - பாகுபலி படக்குழு

நடிகர் ராணா தன் காதலி திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக அறிவித்ததால் தெலுங்கு சினிமா மகிழ்ச்சியடைந்துள்ளது.

Rana
Rana

By

Published : May 13, 2020, 1:30 PM IST

Updated : May 13, 2020, 1:58 PM IST

நடிகர் ராணா தெலுங்கில் 2010ஆம் ஆண்டு வெளியான லீடர் படம் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமல்லாது ராணா தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும் ஆவார். இருப்பினும் 'பாகுபலி' படத்தில் 'பல்வாள்தேவன்' என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். தற்போது ராணா பிரபு சாலமன் இயக்கத்தில் 'காடன்' என்னும் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

திருமணம் செய்யாமல் இருந்துவந்த ராணாவை சுற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் எழும். சில வருடங்களுக்கு முன் ராணாவும் திரிஷாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் சில காரணங்களால் அது தடைபட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து ராணா ஒரு நடிகையை காதலித்து வருவதாக தெலுங்கு சினிமாவில் தகவல்கள் வெளியாகின.

தற்போது தனது காதலி யார் என்பது குறித்து ராணாவே, அவரது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், "அவள் ஓகே சொல்லிவிட்டாள்" என்று பதிவிட்டுள்ளார். ராணாவுக்கு திருமணமும் விரைவில் நடக்க உள்ளது.

ராணா ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரைக் காதலித்து வருகிறார். இவர் இன்டீரியர் டிஸைனராக உள்ளார். சொந்தமாக ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் Event Management, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். மேலும் பகுதி நேர மாடலாகவும் இருந்து வருகிறார். இவர் பாலிவுட் நடிகை சோனம் கபூரின் குடும்ப நண்பரும் ஆவார்.

ராணாவின் இந்த அறிவிப்பையடுத்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதி ஹாசன், தமன்னா, சமந்தா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:’ஓ அந்த நாட்கள்’- மீண்டும் இணைந்த 80'ஸ் நாயகிகள்!

Last Updated : May 13, 2020, 1:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details