தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரம்யா பாண்டியனின் புது பட அப்டேட் வெளியீடு! - idumbankari poster

நடிகை ரம்யா பாண்டியன் நடிக்கும்  'இடும்பன்காரி' படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ரம்யா பண்டியன்
ரம்யா பண்டியன்

By

Published : Sep 11, 2021, 2:28 PM IST

Updated : Sep 11, 2021, 3:23 PM IST

புதுமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், 'இடும்பன்காரி'.

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன், ஷிவாதா நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும், அனுபமா குமார், ’நீயா நானா’ பிரபலம் கோபிநாத், இயக்குநர் வேலு பிரபாகரன் உள்ளிட்டோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் ஒரு சில நாள்களில் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது.

படத்திற்கு அமீன் ஒளிப்பதிவு செய்ய, 'தடம்' பட பிரபலம் அருண் ராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் முதல் பார்வையை நேற்று (செப்.10) படக்குழு வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களை அவர்களது இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் பிரத்தியேக அனுபவத்தை இப்படம் தரும் எனப் படக்குழுவின் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Sep 11, 2021, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details