'ஜோக்கர்', 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதில் அவர் சிறப்பாக நடித்திருந்தாலும் மொட்டை மாடியில் எடுத்திருந்த போட்டோஷூட் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதனையடுத்து 'குக்கு வித் கோமாளி', 'பிக் பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை ஆர்மியாக மாற்றினார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது தனது புகைப்படங்கள், யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தலைகீழாக நின்று யோகா செய்யும் வீடியோவை, மோட்டிவேஷனல் பாடல் போட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க:சைக்கோ கதாபாத்திரத்தில் நட்டி!