உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தற்போது இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை இந்தியாவில் 834 பேர் கரோனாவால் பாதிப்புக்கப்பட்டுள்ளனர். எனவே, இதிலிருந்து தற்காத்துக்கொள்ள அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை இந்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரசு உத்தரவை மீறி யாரும் வெளியே வரவேண்டாம் என்று நடிகை ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “உலகம் ழுழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கரோனாவை எதிர்த்து நாம் அனைவரும் போராடியே ஆகவேண்டும். என் வீட்டிலும் வேலை ஆட்கள் யாரும் வரவில்லை. நான், என் அம்மாவிற்கு சமையலில் உதவுகிறேன்.
தயவு செய்து யாரும் வெளியே செல்லாதீர்கள். மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. நம்முடைய எதிர்காலத்திற்காகவும், தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் நாம் இதை செய்ய வேண்டும்” என்று அதில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க:இல்லத்தில் இருப்போம் இந்தியாவைக் காப்போம் - இயக்குநர் அமீர்