'ஜோக்கர்', 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் ரம்யா பாண்டியன். இதில் அவர் சிறப்பாக நடித்திருந்தாலும் மொட்டை மாடியில் எடுத்திருந்த போட்டோஷூட் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் பட்டாளங்களை உருவாக்கினார். மேலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர் பட்டாளத்தை ஆர்மியாக மாற்றினார்.
திரைத்துறையில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் ரம்யா பாண்டியன் - சூர்யா தயாரிப்பில் புதிய படம் ஒப்பந்தம் - சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்
சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை சென்றவருக்கு தற்போது அதிருஷ்டம் அடித்திருக்கிறது. நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகியுள்ளார். பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை புதுமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார். மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.