'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தைத் தொடர்ந்து, ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்’. இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் - யுவன் ஷங்கர் ராஜா புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். பயண கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டிருந்தார்.
ரியோ ராஜ் - ரம்யா நம்பீசனுடன் எம்.எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான டீஸர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் - இசை மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரெய்லர் - இசை வெளியிட்டு விழாவிற்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:பெண்களை கவனமாக வளர்க்க வேண்டும் - இமான் அண்ணாச்சி