தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராமநாதபுரம் இளைஞர்களுக்கு நடிகர் ஆமீர் கான் வழங்கிய அறிவுரை! - அமீர்கான் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் உரை

போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இளைஞர்கள் வாழ வேண்டும் என்று ராமநாதபுரம் இளைஞர்களுக்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் அறிவுரை வழங்கியுள்ளார்.

aamir-khan
aamir-khan

By

Published : Dec 21, 2019, 10:25 AM IST

Updated : Dec 21, 2019, 10:55 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடிக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ஆமீர் கான் நேற்று தனுஷ்கோடி வருகை தந்தார். அங்கு அவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் நேரில் சந்தித்துப் பேசினார்.

'லால் சிங் சத்தா' படத்தில் அமீர்கான்

அப்போது இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும் அவர்கள் உடலைப் பேணி காக்க அறிவுரை வழங்கும்படியும் வருண் குமார் ஆமீர் கானிடம் கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்டு பேசிய ஆமீர் கான், ”ராமநாதபுரம் இளைஞர்கள் அனைத்து வகையான போதை பழக்கத்தில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். இந்த வாழ்க்கை நமக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அதை நமக்கு மகிழ்ச்சி தரும் வகையிலும் பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்து வகையிலும் வாழ வேண்டும். போதை பொருள்களுக்கு அடிமையாக்கி வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.

காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உடன் அமீர்கான்

மேலும், உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலையும் உள்ளத்தையும் உறுதியாக மாற்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் ஆமீர் கான் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து தனது வேண்டுகோளை ஏற்று அறிவுரை வழங்கியதற்காக வருண் குமார் ஆமீர் கானுக்கு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க...

’மாணவர்களே போராடுவது உங்கள் உரிமை... ஆனால் அதே நேரம்?’ - நடிகர் அனுபம் கேர்

Last Updated : Dec 21, 2019, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details