தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உலகின் மிகப்பெரிய புரூஸ் லீ சிலை முன் ஆர்ஜிவியின் ட்ரெய்லர்! - ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா (ஆர்ஜிவி) இயக்கத்தில் உருவாகியுள்ள ’என்டர் தி கேர்ள் டிராகன்’ படத்தின் சர்வதேச ட்ரெய்லர் சீனாவில் உள்ள புரூஸ் லீ சிலை முன்பு வெளியிடப்பட்டது.

enter the girl dragon trailer launch
enter the girl dragon trailer launch

By

Published : Dec 13, 2019, 8:50 PM IST

சர்ச்சைக்கு பெயர்போன இயக்குநர் ராம்கோபால் வர்மா, புதிதாக இயக்கியுள்ள படம் ’என்டர் தி கேர்ள் டிராகன்’. புரூஸ் லீயை குருவாகப் போற்றும் பூஜா பாலெகர் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். புரூஸ் லீ பிறந்தநாள் (நவம்பர் 27) அன்று இதன் டீசர் வெளியாகி திரையுலக ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் சர்வதேச ட்ரெய்லர் வெளியீடு புரூஸ் லீ சிலையின் முன்பு சீனாவில் நடைபெற்றது.

சீனாவின் ஃபோஷன் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய புரூஸ் லீ சிலை முன்பு ’என்டர் தி கேர்ள் டிராகன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இது குறித்து ராம்கோபால் வர்மா, சைக்கிளில் சென்று புரூஸ் லீயின் 'என்டர் தி கேர்ள் டிராகன்' திரைப்படத்தைப் பார்த்தேன். இப்போது என்னுடைய ’என்டர் தி கேர்ள் டிராகன்’ ட்ரெய்லர் வெளியீட்டுக்காக விமானத்தில் வந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், சீனர்கள் சூழ இருக்கிறேன். புரூஸ் லீ குறித்து பேச வெட்கமாக இருக்கிறது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதையும் வாசிங்க: தத்துவ ஞானியா? சண்டைக்காரனா? - புரியாத புதிர் புரூஸ் லீ!

ABOUT THE AUTHOR

...view details