சென்னை: பாகுபலி படத்தைப் பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தை கரோனா நோய்த் தொற்று பின்னுக்குத் தள்ளியிருப்பதாக வீடியோ ஒன்றை பகிர்ந்து சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.
கரோனா பீதியின் காரணமாக பொதுமக்கள் ஒரு புறம் வீட்டிலேயே முடங்கி கிடந்தாலும், அடிப்படை தேவைகளப் பூர்த்தி செய்வதற்கும், வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கும் மூடப்படாமல் செயல்படும் சூப்பர் மார்கெட்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்திலுள்ள பிரபல ஷாப்பிங் மார்ட் முன்பு பொதுமக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா, ”இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி 2 படத்துக்குக் கூடிய கூட்டத்தை இக்கூட்டம் மிஞ்சியுள்ளது. பீதியடைந்துள்ள அமெரிக்கர்கள் பிரபல ஷாப்பிங் மார்ட் முன்னே வரிசை கட்டி குவிந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுமார் நூறு மீட்டருக்கும் மேலாகப் பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கான வண்டியை எடுத்துக்கொண்டு வரிசை கட்டி நிற்கின்றனர். திரைப்படம், அரசியல், விளையாட்டு என அன்றாட நிகழ்வுகளை வைத்து சர்ச்சையான ட்வீட்டுகளை பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தற்போது உலகம் முழுவதும் கரோனா பீதி தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான கருத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சும்மா பேச்சுக்கு ட்ரம்பை கலாய்த்த ஆர்ஜிவி