ஆன்லைனில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் 'கரோனா வைரஸ்'
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் 'கரோனா வைரஸ்' படம் ஆன்லைனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் 'நேக்கட்' படம், இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் வெளியாகியுள்ளது.
30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தப் படம் தற்போது தொடர்ந்து பார்க்கப்பட்டுவருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து ராம்கோபால் வர்மா கூறுகையில்,
ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை கூறும் படம் தான் 'நேக்கட்'. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
Allyயின் தியேட்டர் அட் ஹோம் ஒரு சிறந்த திட்டம். முதல் முறையாகப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் திறனை எனது குழுவுக்கு வழங்கியுள்ளது.
மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பாதுகாக்கப்பட்ட விநியோகம். பண பரிவர்த்தனைகளில் 100 விழுக்காடு வெளிப்படைத்தன்மை, பைரசியை தடுக்கவும் இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. இதன்மூலம் அதிகமான பயனர்களைப் பாதுகாப்பாக அடைய முடிகிறது.
எங்கள் குழுவின் அடுத்த படமான "கரோனா வைரஸ்" படத்தையும் இதில் வெளியிட திட்டமிட்டுவருகிறோம். உலகிலேயே கரோனா வைரஸ் பற்றி பேசும் முதல் படமாக இது இருக்கும். இதேபோன்று மற்றொரு படமான" மர்டர்" படமும் டிஜிட்டல் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
'நேக்கட்' படம் வெளியீட்டுக்குப் பிறகு, பல தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை the-ally.com ஈர்த்துள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் திரையிடப்பட முடியாத நிலையில் ரிலீஸுக்குத் தயாராக உள்ள 'புதிய தேவதாஸ்', 'கள்ளன்', 'மங்கி டாங்கி' போன்ற புதிய இந்தத் தளத்தில் வெளியாக உள்ளன.
இதுபோன்று மறு வெளியீட்டிற்காக அதர்வாவின் 'செம போத ஆகாதே', கிஷோரின் 'திலகர்', துருவாவின் 'காதல் கசக்குதய்யா', போஸ் வெங்கட்டின் 'கன்னிமாடம்' ஆகிய படங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.