'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர். ஆர். ஆர்). ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ராமராஜு கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்தின் டீசர் நாளை (அக்.22) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.