பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படமான 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர். ஆர். ஆர்.) ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், அலீயா பட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
கொமரம் பீம்மின் குரலாக கர்ஜிக்கும் ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் டிசர்
’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நேற்று (அக்.22) வெளியான ஜூனியர் என்டிஆரின் இண்ட்ரோ வீடியோவிற்கு ராம் சரண் குரல் கொடுத்து அசத்தியுள்ளார்.
கொமரம் பீம்மின் சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையாமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். இதற்கிடையில் நேற்று (அக்.22) ஜூனியர் என்.டி.ஆர். கதாபாத்திரத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டது. வழக்கம் போல் ராஜமெளலி படத்தில் இருக்கும் மாஸ் இப்படத்தில் இடம்பெறும் என்பது டீஸர் மூலம் தெரிக்கிறது.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் இண்ட்ரோ வீடியோவிற்கு ராம் சரண் குரல் கொடுத்து உள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய அனைத்து மொழிகளுக்குமே ராம் சரண் தான் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.