தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களில் பிஸியாக நடித்துவருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர், தற்போது ’மே டே’ படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்று திரும்பியுள்ளார். பின்னர், படப்பிடிப்புக்குச் செல்வதற்காக ஆயத்தமாகி வரும் ரகுல், கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
பரிசோதனை முடிவில், தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுள்ளதாக, நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் வெளிட்ட பதிவு இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை, நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.