தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நாகர்ஜுனாவின் 'மன்மதடு 2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் நாகர்ஜுனா மிகவும் இளமையாக தோற்றமளிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ட்ரெய்லரில் ரகுல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
சிகரெட் சர்ச்சைக்கு ரகுல் பதிலடி! - நாகர்ஜூனா
'மன்மதடு 2' படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ரகுல் அசத்தலான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து ரகுல், "புகைப்பிடிப்பது போல் நடித்திருப்பது படத்திற்காகவும் கதைக்காகவும்தான், நிஜ வாழ்க்கையில் அது போல் இல்லை. என்னைப் பற்றி என் பெற்றோருக்கும் சுற்றியிருப்போருக்கும் தெரியும், வெளியுலகத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவள் நான், நிறைய உடற்பயிற்சி செய்கிறேன். அப்படி இருக்கும்போது நான் சிகரெட் பிடிப்பதை விமர்சிப்பது தேவையில்லாத ஒன்று. சினிமா வாழ்க்கை வேறு, நிஜ வாழ்க்கை வேறு, இயக்குநர்கள் கதைக்கு தேவை என்று கூறுவதை நிஜம் போல் நடித்து கொடுத்தால்தான் அது சிறப்பான காட்சியாக அமையும். படத்திற்காகவே சிகரெட் பிடித்தேன்" என்று கூறியுள்ளார்.