சென்னை: ஏரியல் யோகா என்று கூறப்படும் கயிற்றில் தொங்கியவாறே செய்யும் யோகாவை கற்று வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதுதொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துவரும் ரகுல் ப்ரீத் சிங், தனது உடலமைப்பை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். ஷுட்டிங் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினந்தோறும் ஜிம் சென்று ஒர்க் அவுட் செய்வதை தவறாமல் கடைபிடித்துவரும் அவர், அவ்வப்போது தனது பயிற்சி வீடியோக்களையும் வெளியிடுகிறார்.
Rakul Preet Singh doing Aerial yoga இந்நிலையில், மேற்கூரையில் கயிறு அல்லது துணியை தொங்கிவிட்டு, அதில் கை, கால்களை வைத்து தொங்கியபடி செய்யும் ஏரியல் யோகாப் பயற்சிகளை மேற்கொண்டுவருகிறார் ரகுல். அந்த வகையில், அவ்வாறு யோகா செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், 'காலை சடங்கு' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நான் தலைகீழாக தொங்கும்போது எனது உலகம் சரியாக இருக்கிறது. மேலும் உடலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து மீள்வதுடன், மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று யோகா பற்றி புகழ் பாடும் ரகுல் ப்ரீத், தற்போது தவறாமல் தினந்தோறும் ஏரியல் வகை யோகாக்களை செய்து வருகிறாராம்.
Rakul Preet Singh doing Aerial yoga
இந்த ஆண்டில் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தேவ், சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே, தெலுங்கில் என்டிஆர் கதாநாயகடு, மன்மதடு 2 மற்றும் தீ தீ பியார் தீ ஆகிய படங்கள் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகியுள்ளன. மேலும், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்திலும் நடித்து வருகிறார்.