தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ப்ரோக்கோலி காய்கறியை உடையாக அணிந்து செய்தி சொல்லும்  ரகுல்! - ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராம்

ப்ரோக்கோலி காய்கறியை உடையாக அணிந்து உலக சுற்றுச்சூழல் தினத்தில் ரசிகர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தேவையான கருத்தை தெரிவித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

Rakul preet singh message to fans
Rakul preet singh Instagram

By

Published : Jun 6, 2020, 12:52 AM IST

சென்னை: சைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை காய்கறியை ஆடையாக அணிந்து வித்தியாசமாக வலியுறுத்தியுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைவத்துக்கு மாற முயற்சியுங்கள் என்று எழுத்துகளோடு, ப்ரோக்கோலி காய்கறியை ஆடையாக அணிந்திருப்பதுபோல் புகைப்படம் ஒன்றை பதிந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

அத்துடன், விலங்குகளையும், இந்த கிரகத்தையும் பாதுகாக்க அனைவரும் பீட்டா, என்னுடன் இணைந்து சைவத்தை மட்டும் சாப்பிடுங்கள் என்று கருத்தும் பதிவிட்டுள்ளார்.

உலக சுற்றுச்சுழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பிரபலங்கள் பலரும் பீட்டாவுடன் இணைந்து சைவ சாப்பாடுக்கு மாற வேண்டும் என்பதை பல்வேறு விதமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் ரகுல் ப்ரீத் சிங் மிகவும் வித்தியாசமாக காய்கறி ஆடை அணிந்த ஆடை புகைப்படத்துடன் கவர்ச்சியாகவும், அழகான முறையில் சைவத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details