தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் ரகுல்ப்ரீத் சிங். இவர் நேற்று (அக். 10) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளப்பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது ரகுல்ப்ரீத் சிங் தனது சமூக வலைதளத்தில் தான் காதலிக்கும் நபர் குறித்தான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அந்த நபர் இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானி.
அவருடன் ரகுல்ப்ரீத் சிங் கைக்கோத்து செல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு கூறியிருப்பதாவது, "இந்த ஆண்டில் எனக்கு கிடைத்துள்ள பரிசு நீங்கள். எனது வாழ்க்கையை வண்ணமயமாக்கியதற்கும் இடைவிடாமல் என்னை சிரிக்கவைத்தற்கும் நன்றி. இனி ஒன்றாக இணைந்து நமக்கான நினைவுகளை உருவாக்குவோம்" என ரகுல்ப்ரீத் சிங் பதிவிட்டிருந்தார்.