தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மதுபானம் வாங்க சென்றேனா?- நடிகை ரகுல் ப்ரீத் சிங் விளக்கம் - actress rakul preet sing

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் மதுபானம் வாங்க செல்வதாக வெளியான வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்

By

Published : May 8, 2020, 7:10 PM IST

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட மதுபான கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நேற்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் கையில் பாட்டிலுடன் ரோட்டில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த பலரும் அவர் மதுபானம் வாங்கி சென்றாரா? என்று கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “வாவ்.... மருந்து கடைகளில், மதுபானம் விற்கப்படும் என்ற விஷயம் எனக்கு தெரியவே தெரியாது” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் மருந்துகடைக்கு தான் சென்றார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:'பேட்ட' பட ரகசியங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

ABOUT THE AUTHOR

...view details