1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. லஞ்சம் வாங்குவதால் இந்த சமூகத்தில் நிகழும் அவலங்களை படமாக்கியிருப்பார். இதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் விறுவிறுப்பாக படமாக்கி வருகிறார். இதில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், ரிஷி, ஜகன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
தயாரிப்பு பிரச்னை, கமலின் அரசியல் பயணம் என அவ்வப்போது சொதப்பி வந்த ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது சரிவர நடைபெற்று வருகிறது. இதில் சித்தார்த், ஜகன், ரிஷி, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்கும் முக்கியமான காட்சிகளை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செட் அமைத்து ஷங்கர் படமாக்கி வருகிறார். இதன்மூலம் ரகுல் ப்ரீத் சிங், ‘இந்தியன் 2’ படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கவில்லை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.