தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டி - ஷர்ட் அணிவது போர் அடிக்குது - ரகுல் ப்ரீத் சிங் - தலைகீழாக டி சர்ட் அணியும் ரகுல் ப்ரீத் சிங்

சமூகவலைதளத்தில் பிரபலமாகிவரும் தலைகீழாக நின்று டி - ஷர்ட் அணியும் சேலஞ்சை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

Rakul Preet Singh
Rakul Preet Singh

By

Published : Apr 12, 2020, 3:25 PM IST

கரோனா அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் நேர போக்கிற்காக பல வேலைகளை செய்துவருகின்றனர்.

இதனையடுத்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்களும் ஒவ்வொரு சேலஞ்சை அறிமுகப்படுத்தி பிரபலபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் தலைகீழாக நின்று டி - சர்ட் அணியும் சேலஞ்ச் தற்போது பிரபலமாகியுள்ளது. இந்த சேலஞ்சை பிரபலங்கள் செய்து வருகின்றனர்.

இந்த சேலஞ்சை நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஏற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், எனது டி - ஷர்ட்டை சதராணமாக அணிவது எனக்கு சலித்துவிட்டது. எனவே நீங்கள் அனைவரும் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்ளுங்கள். இது நன்றாக இருக்கிறது என கூறியிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details