தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இந்தியன் 2 'வில் இணைந்த 'என்ஜிகே வானதி' - காஜல் அகர்வால்

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

Indian 2

By

Published : Aug 13, 2019, 9:45 AM IST

Updated : Aug 13, 2019, 6:37 PM IST

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலும் கதாநாயகனாக கமல் நடிக்கிறார்.

கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ராகுல் ப்ரீத் சிங் போஸ்ட்

இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் இணைந்துள்ளார். படத்திற்கான மேக்கப் சாதனங்களுடன் கூடிய ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ரகுல், 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Aug 13, 2019, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details