தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Bigg Boss 5: எதிர்பாராததை எதிர்பாருங்கள்... டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றவர் யார்? - பிக்பாஸ் 5 வின்னர்

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் வெற்றியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

By

Published : Jan 16, 2022, 3:45 PM IST

ரசிகர்களின் விருப்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. வழக்கமாக ஃபைனல்ஸ் நிகழ்ச்சி நேரலையாக நடைபெறும். ஆனால், இந்தமுறை கரோனா பரவல் காரணமாக சனிக்கிழமையே ஃபைனல்ஸ் நடத்தப்பட்டது.

இதனால் யார் பிக்பாஸ் 5ஆவது சீசனின் வெற்றியாளர் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் முன்பே தெரியவந்துவிட்டது.

ராஜூ

இந்நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் பட்டத்தை ராஜூ தட்டிச்சென்றுள்ளார்.

வீட்டில் சண்டை போடாமல், டாஸ்கில் சரியாக விளையாடாத ராஜூக்கு எப்படி டைட்டில் பட்டம் கிடைத்தது என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இரண்டாவதாகப் பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க:என்ஆர்ஐ மீது சல்மான் கான் அவதூறு வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details