தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நந்தினி கைதுக்கு எதிராக கொதிக்கும் இயக்குநர் ராஜூமுருகன்!

திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் நந்தினி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இயக்குநர் ராஜூமுருகன் குரல் கொடுத்துள்ளார்.

ராஜீமுருகன்

By

Published : Jun 30, 2019, 12:53 PM IST

டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக, 2014ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் வாதாடிய நந்தினி, டாஸ்மாக் மூலமாக போதைப்பொருள் விற்கப்படுவது விநியோகிப்பது குற்றமில்லையா என கேள்வி எழுப்பினார்.

இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கறிஞர் நந்தினிக்கு ஜூலை 5ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவரை ஜூலை 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சமூகவலைதளங்களில் நந்தினிக்கு ஆதரவாக இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், நந்தினி விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் ராஜூமுருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மது போதையில் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதில் ஓர் அப்பாவி பெண்மணி உயிரிழந்திருக்கிறார். அவரது கணவர் தோழர் மருத்துவர் ரமேஷ் நீதி கேட்டு அதே சாலையில் அமர்ந்து போராடும் இக்காட்சி இந்த தேசத்தின் இழிவு சித்திரம். இதற்கெல்லாம் செவி சாய்க்காமல் மது ஒழிப்பிற்காக போராடும் நந்தினியை கைது செய்கிறது அதிகாரம். இந்த அரச அதிகாரத்தின் அகோர பசிக்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க போகிறோம்..?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details