கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ஆகிடலாம் எல்லாரும். ஆனால், ரஜினி ஆகிட முடியாது. இன்று வரை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக ரஜினிகாந்த் திகழ்வது பலரையும் வியக்க வைக்கிறது. ஸ்டைல், நடை, உடை பாவனை என அனைத்திலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
தற்போது, பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிக்கு சர்ப்ரைஸ் தந்த பேரன்! - ved
பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மாஸாக நிற்பது போல் அவரது பேரன் வேத் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிக்கு அவரது பேரன் வேத் சர்ப்ரைஸான பரிசு ஒன்றை அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் வேத் தான் ட்ரெண்டிங்கில் உலா வருகிறார். ரஜினிகாந்த் பேட்ட படத்தில் ஸ்டைலாக நிற்பது போன்று வேத் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் தாத்தாவைப் போல் பேரன் நிற்கும் காட்சி மனதைக் கவர்கிறது. இதில், ஒரு தாயாக மகிழ்ச்சியடைகிறேன் என சவுந்தர்யா பதிவிட்டுள்ளார்.
சினிமா, நடிப்பு என இருந்தாலும் குடும்பம்தான் அவரது முதல் உலகம். வேத்துடன் அதிக நேரம் செலவழிப்பார். வேத் செய்யும் சேட்டைகளை ரசிப்பதும் உண்டு. இன்று அவரது பேரன் அவரை போன்றே ரஜினிக்கு சினிமா உலக வாரிசு கிடைத்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.