தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என் அறிவு, உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது' - ராஜ்கிரண் - Rajkiran pays tribute to Vivek's death

என்ன நினைத்து என் மனத்தை தேற்றிக்கொள்ள முயன்றாலும், என் அறிவு, உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது என்று நடிகர் ராஜ்கிரண் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜ்கிரண்
ராஜ்கிரண்

By

Published : Apr 18, 2021, 11:28 AM IST

நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ராஜ்கிரண் இரங்கற் பா கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"தம்பி விவேக்,

அண்ணா அண்ணா என்று

என்னை வாய் நிறைய அழைத்த

போதெல்லாம்,

அன்பைத்தேடிப்போனாய்

அறிவைத்தேடிப்போனாய்

பண்பைத்தேடிப்போனாய்

எல்லாவற்றையும் என்னால்

புரிந்துகொள்ள முடிந்தது,

மகிழ்ச்சியாய் இருந்தது.

இப்பொழுது,

தாயைத் தேடிப்போனாயோ

தனயனைத் தேடிப்போனாயோ

யாரை நம்பிப்போனாயோ

எதையுமே என்னால்

புரிந்துகொள்ள முடியவில்லை,

மனம் தவிக்கிறது.

என்ன நினைத்து என் மனதை

தேற்றிக்கொள்ள முயன்றாலும்,

என் அறிவு, உன் இழப்பை

ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details