தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராஜீவ் மேனன், மதன் கார்க்கி இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல் வெளியீடு

‘கடவுளும் நானும்’ எனும் தலைப்பில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன், மதன் கார்க்கி ஆகியோர் இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல் வெளியாக உள்ளது.

ராஜீவ் மேனன் மதன் கார்க்கி
ராஜீவ் மேனன் மதன் கார்க்கி

By

Published : Dec 31, 2020, 8:06 AM IST

மார்கழி மாதம் உறைய வைக்கும் பனியையே பொதுவாக நியாகப்படுத்தினாலும், கர்நாடக இசை உள்ளிட்ட பல இசை வடிவங்களையும் கொண்டாடும் இசைப் பிரியர்களுக்கு மார்கழி மாதம் மனதிற்கு இதமான இசையையே நினைவுக்கு கொண்டு வரும். இத்தகைய மார்கழி மாத இசை விழாக்களில் பெரும்பாலும் பழந்தமிழ்ப் பாடல்களே பாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனனும் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் இணைந்து புதிய தமிழிசைப் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

‘கடவுளும் நானும்’ எனும் தலைப்பில் இந்தப் பாடல் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது. முன்னதாக இசைக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் மேனனின் இசையமைப்பில், அவர் இயக்கிய ’சர்வம் தாளமயம் படத்தில் ‘வரலாமா உன்னருகில்’ எனும் பாடல் இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை எழுதிய மதன் கார்க்கி திரைப்படப் பாடல்கள் தவிர நூற்றுக்கணக்கான தனியிசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கடவுளும் நானும்’ பாடல், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான நெருக்கத்தைப் பற்றிய வரிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்கு ராஜீவ் மேனன் காம்போஜி ராகத்தில் மெட்டமைத்துள்ளார். முன்னதாக, மைலாப்பூரில் நடந்த ஒரு இசை விழாவில் முதன்முதலாக இந்தப்பாடல் அரங்கேற்றப்பட்டது.

தற்போது ஆண்டு இறுதியில் இப்பாடல் வெளியாகிறது. இதேபோல் இன்னும் பல தமிழிசைப் பாடல்களை ராஜீவ் மேனனும் மதன் கார்க்கியும் உருவாக்கி வருகிறார்கள். இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவில் ராஜீவ்மேனனும் அவருடைய மைண்ட் ஸ்கிரீன் திரைப்படக் கல்லூரி ஒளிப்பதிவு மாணவர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இயற்கைக் காட்சிகளை பாடல் வரிகளுக்கேற்ப படம்பிடித்துள்ளனர். டிவோ இசைத் தளத்திலும் வெவ்வேறு இசை சீரோட்டத் தளங்களிலும் இந்தப் பாடல் வெளியாகிறது.

இதையும் படிங்க :விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் சிம்பு!

ABOUT THE AUTHOR

...view details