தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தளபதியின் சர்காரை தொடர்ந்து... தலைவரின் 'தா்பார்' மிரட்ட இருக்கும் 'ஏ.ஆர்' - நயன்தாரா

ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு ’தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

தா்பார்

By

Published : Apr 9, 2019, 9:29 AM IST

’பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் தொடங்கவுள்ளது. ரஜினியுடன் முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்திருப்பதால் அனைவரிடமும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனையடுத்து, ’தலைவர் 167’ என பெயரிடப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரஜினி மற்றும் முருகதாஸ் ரசிகர்களிடையே இருந்துவந்தது.

லைகா நிறுவனம்

இந்நிலையில் ரஜினி-முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் ’தர்பார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் லைகா நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்துடன் கருப்புக்கண்ணாடி அணிந்துள்ளார். மேலும் அவரைச் சுற்றி பயங்கர ஆயுதங்கள் இருப்பது போன்று உள்ளதால் இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ரஜினி போலீஸ் கேரக்டர் என்பதும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவருகிறது. அடுத்த வருட பொங்கலுக்கு தர்பார் வெளியாக இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details