ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள தர்பார் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இன்று அதிகாலை சிறப்புக் காட்சியைக் காணக் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் தங்களது மகழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நள்ளிரவு முதலே திரையரங்க வளாகத்தில் குவிந்த ரசிகர்கள் தர்பார் படத்தை வரவேற்கும் வகையில், ஆடல்-பாடல் என உற்சாக வெள்ளத்தில் தத்தளித்தனர்.
பேனரில் இருக்கும் ரஜினியின் படத்திற்கு பூஜை செய்வது, கேக் ஊட்டுவது, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பது போன்றவற்றின் மூலம் ரஜினி மீதான தங்களது அளப்பறியாத அன்பை வெளிக்காட்டினர்.
அந்த வகையில், சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியைக் காண லதா ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர். அவர்களை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு ஆரவாரமாகக் கூச்சலிட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தர்பார் படம் பார்த்த ராகவா லாரன்ஸ் பேட்டி தர்பார் படம் பற்றி பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், 'படம் பிரமாதமாக இருக்கிறது. தலைவரின் ஸ்டைல் எக்ஸ்டார்டினரி. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம் சூப்பர். லைகா புரொடக்ஷன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி' என தெரிவித்தார்.
இதையும் படிங்க...
மதுரையில் 'தர்பார்' ஆட்டம்: அதகளம் செய்த ரஜினி ரசிகர்கள்