நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் 'தர்பார்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மும்பை போலீஸ் அலுவலராக தோன்றும் ரஜினியுடன் யோகி பாபு, தம்பி ராமைய்யா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறவிப்பில் நடிகர் ரஜினி காந்தின் 168ஆவது திரைப்படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதனை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் நடிப்பில் வெளியான எந்திரன், பேட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக ரஜினியின் படத்தை தயாரிக்கிறது.