மறைந்த இயக்குநர் மகேந்திரன் முதன்முதலாக இயக்கிய படம் ‘முள்ளும் மலரும்’. 1978ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ரஜினி, ஷோபா, சரத்பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரஜினியின் திரைப்பயணத்தில் இன்றளவும் முக்கியமான படமாக இது கருதப்படுகிறது.
இப்படத்தில் ரஜினி, காளி எனும் கோபக்கார இளைஞனாக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் கைகளை இழந்த காளி தனது உயர் அதிகாரியிடம் , "ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட இந்தக் காளி பொழச்சுக்குவான் சார்... கெட்ட பயசார் அவன்" என்று கூறுவார். இந்த வசனம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.