தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தர்பாரை முடித்துவிட்டு வீடு திரும்பிய ரஜினி - தர்பார் டீஸர்

தர்பார் படம் நன்றாக வந்துள்ளது. அரசியல் கேள்விகளுக்கு வழக்கம்போல் சிரித்துக்கொண்டே பதில் அளிக்காமல் சென்னை விமான நிலையத்திலிருந்து விறுவிறு என சென்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த்

By

Published : Oct 4, 2019, 12:47 PM IST

தர்பார் படத்தில் தனது பகுதியை முடித்துவிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல் அலுவலராக நடிக்கிறார். படம் தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வருகிறது.

தர்பார் படத்தின் ஷுட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த மாதம் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மும்பை பறந்தார் ரஜினி. அங்கு சுமார் 10 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில், தற்போது தனது பகுதியை முடித்துள்ளார்.

இந்த நிலையில், ஷுட்டிங்கின்போது உதவி இயக்குநர்களுடன் ரஜினிகாந்த் ஜாலியாக உரையாடியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ஷுட்டிங் முடிந்த கையோடு விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார்.

தர்பார் உதவி இயக்குநர்களுடன் ரஜினிகாந்த்

அப்போது அவரை சந்தித்த பத்திரிகையாளர்களிடம், தர்பார் ஷுட்டிங் முடிந்துவிட்டது. படம் நன்றாக வந்துள்ளது என்றார். தொடர்ந்து பல்வேறு அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்டபோது, சிரித்துக்கொண்டே பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, பிரதிக் பாபர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யோகி பாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

படத்துக்கு இசை - அனிருத். ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். தயாரிப்பு - லைகா புரொடக்‌ஷன் நிறுவனம்.

ABOUT THE AUTHOR

...view details