தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் - ரஜினி கருத்து! - cinema news
சென்னை: தமிழ்நாடு இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? - கமல்ஹாசன்
Last Updated : May 10, 2020, 11:01 AM IST