தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒரே ஒரு சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்துகள்...பிரபலங்கள் பெருமிதம்! - ரஜினி பிறந்தநாள்

சென்னை: ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சமூகவலைதளத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Rajinikanth
Rajinikanth

By

Published : Dec 12, 2020, 1:17 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ரசிகர்கள் பலரும் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர். ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று (டிசம்பர் 11) முதலே கோயில்களில் சிறப்பு பூஜையும் யாகம் நடத்தியும் கொண்டாடத் தொடங்கி விட்டனர். அதே போல் ரஜினி மக்கள் மன்றத்தினரும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி பிறந்தநாளின் காமன் டிபி வெளியிட்டு, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்துக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் உங்களுக்கு உற்சகமான வருடங்கள் அமையும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ராதிகா சரத்குமார் தனது ட்விட்டரில், இந்த பிறந்தநாளில் அமைதியும் ஆரோக்கியமும் கிடைக்க ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா...உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்நாளை தந்து கடவுள் ஆசீர்வதிப்பதாக... உங்களின் திறமையான தலைமை தந்து பல அற்புதங்களை நிகழ்த்தி எங்களை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சுருக்கம். இவருக்கும் இந்த ஆண்டும் அனைத்து வெற்றிகளும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகிறேன். எப்போதும் போல் உங்கள் புன்னகை முகத்துடன் எங்களுக்கு ஊக்கமளிக்கவும் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த், எங்கள் வாழ்நாளில் உங்களை அறிந்திருப்பது உண்மையிலே பாக்கியம். உங்களுக்கு அனைத்து வெற்றிகளும் ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் நிவின்பாலி தனது ட்விட்டர் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி. எங்கள் அனைவருக்கும் ஊக்கமளித்ததற்கு நன்றி. உங்களுக்கு ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒரு அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஹரிஷ்கல்யாண், நீங்கள் ஒரு அற்புதம், ஒரு அதிசயம். எங்களுக்கு இனி வர இருக்கும் தலைமுறையினருக்கும் உத்வேகம் அளித்தமைக்கு நன்றி. நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் வாழ பிரத்தனை செய்கிறேன் தலைவா என பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா என பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களது ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஒருபோதும் முடிவடையாத மகிழ்ச்சியும் அமைதியும் கடவுள் உங்களுக்கு வழங்க பிரத்தனை செய்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா... நிறைய அன்புடன் ஆரோக்கியமாக வாழ உங்களுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், கடின உழைப்பால் உயர்ந்த எளிமையான மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எங்கள் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடவுள் அவரை எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிப்பாராக என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் - அனைவரும் கொண்டாட இன்றைய தினத்தில் பிறந்தவருக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

நடிகை பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில், வெற்றியின் சுருக்கம் ரஜினி. தனிப்பட்ட முறையில் யாரையும் காயப்படுத்தாமல் வெற்றிபெற என்ன தேவை என்பதற்கு உதரணமாக எங்களுக்கு நீங்கள்இருக்கிறீர்கள். எங்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details