தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கிறாரா ரஜினி? - விஜய்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கிறார் ரஜினி

நடிகர் விஜய்க்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

rajinikanth to act in script written for vijay
rajinikanth to act in script written for vijay

By

Published : Dec 13, 2019, 8:45 PM IST

நடிகர் ரஜினிகாந்த் தனது 70ஆவது பிறந்தநாளை நேற்று சீரும் சிறப்புமாகக் கொண்டாடினார். பல திரைப்பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்களில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே, சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

'தலைவர் 168'படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன் ரஜினியிடம் கூறிய ஒரு கதைக்கும் அவர் பச்சைக்கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யை வைத்து கௌதம் இயக்குவதாக கூறப்பட்ட'யோஹன் அத்தியாயம் ஒன்று' திரைப்படத்தின் கதையாக இது இருக்கலாம் என அதிகாரப்பூர்வமில்லாத தகவலும் வெளியாகியுள்ளது.

யோஹன் அத்தியாயம் ஒன்று

இதற்கு முன்பாக கௌதம் இயக்கிய 'ஜோஸ்வா- இமைபோல் காக்க' திரைப்படமும் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதையும் படிங்க : அற்புதமான குழந்தைப் பருவத்தை தந்ததற்கு நன்றி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details