காட்டுக்குள் சென்று எப்படி உயிர் வாழ்வது என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் டிஸ்கவரி தொலைக்காட்சி மேன் vs வைல்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் பிரதமர் மோடியை தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸுடன் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் காட்டிற்குச் சென்றிருந்தார்.
இதையடுத்து இந்நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள நிலையில், தற்போது நிகழ்ச்சியின் ஒரு சில காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி, கிரில்ஸுக்கு ஈடு கொடுத்து பல்வேறு சாகசங்களைச் செய்துள்ளார். மேலும் இடையிடையே இருவரும் உரையாடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.