தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தமிழ் மக்கள் இல்லையென்றால் நான் இல்லை'- டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்.! - டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விழாவில் பேசிய ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குனர் கே. பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” என்றும் கூறினார்.

Rajinikanth
Rajinikanth

By

Published : Oct 25, 2021, 12:52 PM IST

Updated : Oct 25, 2021, 1:08 PM IST

டெல்லி : 67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று (அக்.25) நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே (வாழ்நாள் சாதனையாளர் விருது) வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், “இந்த விழாவில் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். எனக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி.

தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த்

நான் இந்த விருதை எனது வழிகாட்டி கே. பாலசந்தர் சாருக்கு சமர்ப்பிக்கிறேன். என் அண்ணன் சத்தியநாராயணா, எனக்கு ஒரு தந்தையாக இருந்து நல்லதை போதித்தார். எனது நண்பர் பெங்களூரு பேருந்து ஓட்டுநர் ராவ் பகதூர் எனக்குள் இருக்கும் நடிப்பு திறமையை உணர்ந்து என்னை நடிக்க கூறினார்.

இந்தத் தருணத்தில் சினிமாவில் என்னை இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இதர கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை. ஜெய்ஹிந்த்” என்றார்.

இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

Last Updated : Oct 25, 2021, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details