தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Maanaadu: லிட்டில் சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் - மாநாடு அப்டேட்

மாநாடு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவைப் பாராட்டியதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

rajinikanth praised maanaadu movie
rajinikanth praised maanaadu movie

By

Published : Nov 27, 2021, 7:04 AM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மாநாடு'. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ரசிகர்களைத் தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் 'மாநாடு' படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் 'மாநாடு' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில், "இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள்.

சூப்பர் ஸ்டாரின் அழைப்பும், பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது. நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்திவைத்திருக்கிறது.

மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்... மிக்க நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Maanaadu Movie 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'... இறுதியாக வெளியானது மாநாடு

ABOUT THE AUTHOR

...view details