'பேட்ட' படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ’தர்பார்’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சென்னையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் ரஜினி கலந்துகொள்கிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, ப்ரதீப் பாப்பர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இணையத்தில் கசிந்த ரஜினியின் மாஸ் கெட்டப்! - போலீஸ் கெட்டப்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தில் ரஜினிகாந்த் மாஸாக நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் லீக்கானது.
பிரமாண்ட பொருட்செலவில் லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றாலும், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக்காகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தில் ரஜினி மும்பை கமிஷனராக நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ரஜினி போலீஸ் உடையணிந்து ஸ்டைலாக நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காரில் வந்து இறங்குவது, கண்ணாடி அணிந்து செல்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.