ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற ’மேன் வெர்சஸ் வைல்ட்’ படப்பிடிப்பில் சமீபத்தில் பங்கேற்றிருந்தார். இதுமட்டுமின்றி, படப்பிடிப்பில் ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உலகம் முழுவதும் ட்ரெண்டான இந்நிகழ்ச்சியானது, மார்ச் 23 ஆம் தேதி ஒளிப்பரப்படும் என டிஸ்கவரி சேனல் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து, டீஸர் ஒன்றை வெளியிட்டிருந்தது.
தற்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் சிறு தொகுப்பை இரண்டாவது டீஸராக வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த், தனது முன் இருக்கும் ஒவ்வொரு சவால்களையும் இடைவிடாமல் முழு உத்வேகத்துடன் செய்கிறார்.