நடிகர் ரஜினிகாந்த்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து சிங்கப்பூர் சென்ற அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருவதை ரஜினிகாந்த்வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில், இந்த ஆண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் நாளை மறுநாள் (ஜுன்.19) தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் அங்கேயே தங்கி 3 மாத காலத்திற்கு ஓய்வெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கரோனா பரவல் காரணமாக, தனி விமானத்தில் செல்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த் ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருந்தார். தற்போது அவருக்கு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்து விட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவர் நாளை மறுநாள் அமெரிக்கா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஒன்றிய அரசின் அனுமதி பெற்று அமெரிக்கா பறக்கும் ரஜினி?