தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கமலை சந்தித்த ரஜினி - மகள் திருமணத்துக்கு அழைப்பு - கமல்ஹாசன்

தனது இளைய மகளின் திருமணத்துக்கு அழைப்பு விடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார் நடிகா் ரஜினிகாந்த்.

file pic

By

Published : Feb 8, 2019, 12:19 PM IST

ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குநருமான சௌந்தர்யாவின் திருமணம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இவரது திருமணம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனக்கு நெருங்கிய நண்பர்கள், பிரபலங்களுக்கு அவரே நேரில் சென்று திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருகிறாா்.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இசையமைப்பாளர் இளையராஜா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூா் ராஜூ உள்ளிட்டோரை ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது செளந்தர்யாவின் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர் கமீலா நாசர் உடன் இருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details