நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (அக்.28) அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில், ரஜினிகாந்துக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ் (necrosis) எனப்படும் இந்தப் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.