தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிறுத்தை சிவாவுக்கு சூப்பர்ஸ்டார் தந்த இன்ப அதிர்ச்சி! - தங்க செயின் பரிசளித்த ரஜினி

தான் நடித்த அண்ணாத்த திரைப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவின் வீட்டுக்குச் சென்ற ரஜினிகாந்த் அவரைப் பாராட்டி பரிசு ஒன்றினை அளித்துள்ளார். அவர் என்ன பரிசளித்தார்? அதற்கான காரணமென்ன என்பது குறித்து கீழே உள்ள செய்தியில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

சிறுத்தை சிவாவுக்கு பரிசளித்த ரஜினி!
சிறுத்தை சிவாவுக்கு பரிசளித்த ரஜினி!

By

Published : Dec 9, 2021, 4:44 PM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கூட்டு குடும்பப் பின்னணியில் உருவான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

வெளியீட்டிற்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தனது பேரன் வேத் திரைப்படம் குறித்து வெகுவாகப் பாராட்டியதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியையும் தனது மகள் உருவாக்கிய 'ஹூட்' ஆப்பின் மூலமே அவர் பதிவுசெய்திருந்தார்.

அப்பாவுடன் இயக்குநர் சிவா மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டுமென சௌந்தர்யா கோரிக்கையும் விடுத்திருந்தார். அதன் பின்னர் தீபாவளிக்கு வெளியிடப்பட்ட 'அண்ணாத்த' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாமல் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் இயக்குநர் சிறுத்தை சிவாவின் வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்த், அவருக்குத் தங்கச் சங்கிலி பரிசளித்துப் பாராட்டியுள்ளார். அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியமைக்காக சிவாவுக்கு பரிசளிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி - சிவா கூட்டணி இணையவுள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் காட்டுத்தீயாய் பரவிவருகின்றன. இருவரும் இணையும் அடுத்த திரைப்படத்திலாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் கதைக்களத்தை உருவாக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள புலம்பிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் ட்ரெய்லர்: பாகுபலி மேஜிக்கை மீண்டும் உருவாக்கிய ராஜமௌலி!

ABOUT THE AUTHOR

...view details