ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தர்பார்’ படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் கமிட்டானார் ரஜினிகாந்த். இதன் படிப்பிடிப்பு தெலங்கானாவில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் போயிக்கொண்டிருந்த நேரம் கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. எனவே அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டன.
முகக்கவசத்தோடு ஊர்சுற்றும் ரஜினி - வைரலான புகைப்படம் - superstar rajinikanth
ரஜினிகாந்த் காரில் உலா செல்லும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரோனா சூழலில் விளிம்பு நிலை மக்கள் முதல் உலகப் பிரபலங்கள் வரை அனைவரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சில பிரபலங்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக வீட்டில் முடங்கியிருந்த ரஜினிகாந்த், தனது காரில் ஒரு ரவுண்ட் அடித்திருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர் ஒருவர், ரஜினியை போட்டோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்ற, இது தற்போது வைரலாகி வருகிறது.