தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் இன்று (நவம்பர் 14) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. தீபாவளியை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
அந்தவகையில் இன்று காலை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டின் முன்பாகக் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனால் அங்கு கூடிய அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.