சென்னை: கரோனா தொற்று பீதியின் காரணமாக அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.
அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்தக் கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என்று பதிவிட்டுள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து, பாதுகாப்பாக இருப்பது குறித்தும் பிரபலங்கள் பலரும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்த் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆசை இல்லை: நடிகர் ரஜினிகாந்த்